தற்கொலை செய்துகொள்ளத் தண்டவாளத்தில் விழுந்த பெண் கைதியை, ரயில் வருவதை அறிந்தும் துணிச்சலுடன் பாய்ந்து காப்பாற்றிய காவலர்

0 3637

மும்பை தாதரில் தற்கொலை செய்துகொள்வதற்காக தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்த பெண் கைதியைக் காவலர் ஒருவர் உடனடியாக மீட்டுக் காப்பாற்றிய காட்சி வெளியாகியுள்ளது.

ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணைக் காவலர் இருவர் தாதர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் அழைத்துச் சென்றனர். அப்போது அருகில் ரயில் வருவதைப் பார்த்த அந்தப் பெண் கைதி, பெண் காவலரின் கைகளைத் தட்டிவிட்டு ஓடிச் சென்று தற்கொலை செய்யும் நோக்கில் தண்டவாளத்தில் விழுந்தார்.

இதைச் சற்றும் எதிர்பாராத ஆண் காவலர் உடனடியாகப் பாய்ந்து சென்று ரயில் வருமுன் அந்தப் பெண்ணைத் தண்டவாளத்தை விட்டு அகற்றிக் காப்பாற்றினார். இதையறிந்த ஓட்டுநரும் உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments