பிரசவித்த தாய்க்கு தொற்று இல்லை - பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவர்கள் குழப்பம்

0 2745

த்தர பிரதேச மாநிலத்தில், பிரசவித்த தாய்க்கு தொற்று இல்லை என முடிவு வந்திருந்த நிலையில், அவருக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அனில் பிரஜாப்தி என்ற தொழிலதிபரின் மனைவி சுப்ரியா, பிரசவம் காரணமாக வாரனாசியில் உள்ள சர் சுந்தர்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 24ம் தேதி பிரசவத்திற்கு முன்பாக RT-PCR பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சுப்ரியாவுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில் 25ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அந்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனிடையே RT-PCR பரிசோதனையில் சில குறைகள் இருக்கவே செய்கிறது என மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் கவுஷன் குமார் குப்தா கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments