எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் - பிசிசிஐ

0 3731

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனின் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளது. காணொலியில் நடந்த பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியாவில் பருவமழை துவங்குவதால் போட்டிகளை துபாய் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கொரோனாவின் இரண்டாவது அலை வீசிய நிலையில் ஐபிஎல்-ல் விளையாடும் பல அணிகளின் வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால்,போட்டிகளை தள்ளிவைப்பதாக கடந்த 4 ஆம் தேதி பிசிசிஐ அறிவித்தது. மொத்தமுள்ள 60 போட்டிகளில் இன்னும் 31 போட்டிகள் பாக்கி உள்ளன.

தற்போது 8 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன்  டெல்லி கேப்பிடல்ஸ் அணி  தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments