கொரோனா நோயாளிகளின் அவசர தேவைக்கு, கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர்கள் கேரளாவில் அறிமுகம்

0 1646

கொரோனா நோயாளிகள் அவசர காலத்தில் பயன்படுத்தும் வகையில் கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர் கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தீவிர கொரோனாவால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அவசியமாகியுள்ளது. இந்த நிலையில், அவர்களின் அவசர தேவைக்கு உதவும் வகையில் கேரளாவில் செயல்படும் தனியார் நிறுவனம், கையடக்க ஆக்சிஜன் சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

10 லிட்டர் ஆக்சிஜன் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் ஒன்று 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 140 கிராம் எடை கொண்ட இந்த சிலிண்டரை வீடுகளில் வைத்துக்கொள்வது மட்டுமின்றி பயணத்தின் போதும் எளிதில் எடுத்துச் செல்ல முடியும்.

முகக்கவசம் போல சிலிண்டரின் மேல் பொருத்தப்பட்டுள்ள சாதனத்தை பயன்படுத்தி, எளிதில் சுவாசிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments