பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு மற்றும் ஏப்ரல் - மே மாதத்துக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆப்லைன் முறையில் நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்

0 6616

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு மற்றும் ஏப்ரல் - மே மாதத்துக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆப்லைன் முறையில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆன்லைனில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் தோல்வியடைந்தனர். ஆன்லைன் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதால் தோல்வி என விளக்கமளித்த அண்ணா பல்கலைக்கழகம், மறு தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மறு தேர்வு 3 மணி நேர தேர்வாக ஆப்லைன் முறையில் நடைபெறும். அதேபோல நடப்பு ஏப்ரல் - மே மாத செமஸ்டர் தேர்வும் ஆப்லைனில், பேப்பர் - பேனா முறையிலேயே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான கட்டணத்தை அனைத்து கல்லூரிகளும் வருகிற 12-ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments