ஊரடங்கை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்... நூதன முறையில் அறிவுரை வழங்கிய போலீசார்..!

0 2136

தேனியில் ஊரடங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்கால் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் நூதனமான முறையில் அறிவுரை கூறி அனுப்பினார்.

பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி புறவழிச் சாலை அருகே 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முக கவசம் அணியாமல் கிரிக்கெட் விளையாடினர்.

அப்போது அங்கு வந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார்  அவர்கள் அனைவரையும் ஒரு மணி நேரம் தனது வலது கையை நீட்டியவாறு, நோய்த்தொற்றின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து வீட்டிலேயே இருப்பேன்- வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் எனக் கூறச் சொல்லி உறுதிமொழி எடுக்க வைத்து அனுப்பி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments