கொரோனா தடுப்பு ஆய்வுக்காக நாளை கோவை வரும் தன்னை வரவேற்க யாரும் வரவேண்டாம்: திமுகவினருக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

0 2973

கோவையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், ஆய்வு செய்யவும் வரும்போது தன்னை வரவேற்க திமுக நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், மருத்துவர்களுடன் ஆலோசிக்கவும் நாளை கோவைக்குச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். திமுக நிர்வாகிகள் யாரும் தன்னை நேரில் வரவேற்பதற்கும் சந்திப்பதற்கும் ஆர்வம் காட்ட வேண்டாம் என்றும், கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளைக் கவனிக்கும் அமைச்சர்கள் தவிர மற்றவர்கள் வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உணவு வழங்கும் பணியை மேற்கொண்டு, ஒருவர்கூடப் பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்குவதையே தனக்கு அளிக்கும் சிறப்பான வரவேற்பாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments