பிரதமர் மோடியின் கூட்டத்தை புறக்கணித்த மம்தா... மத்திய பிரதேச முதலமைச்சர் கண்டனம்

0 1409

யாஸ் புயல் தொடர்பான பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்ததன் மூலம், மேற்கு வங்க மக்களை, முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவமதித்து விட்டதாக, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று, புயலுக்கு பிறகான சேதாரங்களை பற்றி ஆய்வு செய்வதற்காக மேற்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள கலைகுண்டாவில் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் பங்கேற்க 30 நிமிடங்கள் தாமதாக வந்த மம்தா பானர்ஜி, சில ஆவணங்களை அளித்து விட்டு கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பிச் சென்றார்.

இதற்கு டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள சிவராஜ் சிங் சவுகான், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது தாமும் மத்திய பிரதேச முதலமைச்சர் ஆக இருந்ததாகவும், ஆனால் அவரை ஒருபோதும் அவமரியாதை செய்ததில்லை என்றும் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments