அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான, பத்மஸ்ரீ அனந்தகிருஷ்ணன் காலமானார்

0 1757

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பதம்ஸ்ரீ அனந்தகிருஷ்ணன் காலமானார்.

அவருக்கு வயது 93. கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற அவர், கான்பூர் ஐஐடியில் பேராசிரியராக  பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து, வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் அறிவியல் ஆலோசகர், ஐ.நா சபையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் துணை இயக்குநர் ஆகிய உயர் பதவிகளையும் வகித்தார்.

பின்னர், 1990 முதல் 1996 வரை இருமுறை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்த அனந்தகிருஷ்ணனுக்கு 2002ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. நுரையீரல் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments