பட்டப்பகலில் காரை வழிமறித்து டாக்டர் தம்பதி சுட்டுக் கொலை... பதற வைக்கும் வீடியோ காட்சி

0 7377

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பட்டப்பகலில் டாக்டர் தம்பதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த பதைபதைக்கும் காட்சி சாலையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. காரில் சென்று கொண்டிருந்த கணவன்-மனைவி இருவரையும் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் காரை மடக்கி நிறுத்தினர். அதிலிருந்து இறங்கிய ஒருவன் சில நொடிகளில் டாக்டரையும் அவர் மனைவியையும் மிக நெருக்கத்தில் நின்று பல முறை சுட்டுத் தள்ளினான்..

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 25 வயது இளம் பெண்ணையும் அவளது 6 மாத குழந்தையையும் கொலை செய்த வழக்கில் இந்த டாக்டர் தம்பதிகள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments