உத்தரப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் உயிரிழப்பு

0 1016

உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாரயம் குடித்த 12 பேர் உயிரிழந்தனர்.

அலிகார் அருகே உள்ள லோதா என்ற இடத்தில் கடந்த வியாழக்கிழமை கள்ளச்சாரயம் காய்ச்சிய கும்பல் விற்பனை செய்த சாராயத்தை வாங்கிக் குடித்தவர்கள் கடும் உடல் உபாதைகளுக்கு ஆளாகினர். லோதா, ஆண்ட்லா மற்றும் சேரத் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

நேற்று காலை 7 பேர் உயிரிழந்திருந்த நிலையில் நேற்று இரவு மேலும் 5 பேர் மரணித்ததால் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மதுபானக் கடை உரிமையாளர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர். கடமை தவறியதாக அலிகார் நகரைச் சேர்ந்த 5 கலால்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments