அதிகரித்து வரும் கொரோனா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவையில் ஆய்வு

0 2412

கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,தடுப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார்.

அங்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 3 ஆயிரத்து 937 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் தொற்று பாதிப்பில் தொடர்ந்து 3-ஆவது நாளாக சென்னையை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தில் கோவை மாவட்டம் உள்ளது.

இதையடுத்து, கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்துகிறார். இதற்காக, சனிக்கிழமை மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் கோவைக்குச் செல்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments