உள்நாட்டு சட்டங்களை மதித்து நடக்க ட்விட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

0 2778

இந்திய அரசியல் சட்டங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்று டிவிட்டருக்கு மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தனி நபர் உரிமையை அரசு மதிக்கிற போதும் கொள்கை ரீதியான முடிவுகளில் அரசுக்கு டிவிட்டரின் ஆலோசனை தேவையில்லை என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் சில விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு டிஜிட்டல் சட்டத்தை அறிவித்தது.

இதற்கு சமூக ஊடகங்கள் ஆட்சேபம் தெரிவித்த போதும் மத்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிமுறைகளை ஏற்றுக் கொள்வதாக கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பெரும்பாலான சமூக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உடன்பட மறுக்கும் டிவிட்டருடன் மத்திய அரசுக்கு மோதல் வலுத்து வருகிறது.

தகவல் தொழில்நுட்பத்துறையின் புதிய சட்டத்தை டிவிட்டர் மதிப்பதில்லை என்று அரசு குற்றம்சாட்டியுள்ளது.அரசின் நடவடிக்கையை எதிர்த்து டிவிட்டர் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் இந்திய அரசியல் சாசனத்தில் உறுதியளிக்கப்பட்ட கருத்து சுதந்திரம் தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரானது என்று டிவிட்டர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூல் கிட் விவகாரம் தொடர்பாக குருகிராமில் உள்ள டிவிட்டர் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தியதிலிருந்து அரசுடன் டிவிட்டருக்கு மோதல் வலுத்துவருகிறது,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments