அகமேறிய தந்தை மகளின் காதலனை துண்டு துண்டாக்கி புதைத்தார்.! இங்கே டீ வச்சில்லாம் பேசமுடியாது..!

0 7392
பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் மகளின் காதலனை அழைத்து தந்தை டீ குடித்துக் கொண்டே சமாதானம் பேசுவது போல, நிஜத்தில் தந்தையால் பேச்சுவர்த்தைக்கு அழைக்கப்பட்ட மகளின் காதலன் துண்டு துண்டாக வெட்டி விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் மகளின் காதலனை அழைத்து தந்தை டீ குடித்துக் கொண்டே சமாதானம் பேசுவது போல, நிஜத்தில் தந்தையால்  பேச்சுவர்த்தைக்கு அழைக்கப்பட்ட மகளின் காதலன் துண்டு துண்டாக வெட்டி விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தில் காதலியின் தந்தை தனது மகளின் காதலனை அழைத்து டீ குடித்துக் கொண்டே நாசுக்காக காதலை கைவிட சொல்லி சமாதானம் பேசுவார்..!

அதே போன்ற நிஜ சமாதான சம்பவம் , ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கொலையில் முடிந்துள்ளது. அங்குள்ள பலமனேர் மண்டலம்
பெங்கரகுந்தா கிராமத்தைச் சேர்ந்த பாபுவின் மகள் சைலஜாவும் , இளைஞர் தனசேகரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. தனசேகர் பெங்களூரில் டிரைவராக வேலை செய்து வந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தனசேகர் கடந்த ஒரு மாதமாக தனது சொந்த கிராமத்தில் தங்கி இருந்து சைலாஜாவுடன் காதலை வளர்த்து வந்தார் .

தங்களது மகள் சைலஜா தனசேகரை காதலிக்கும் தகவலை அறிந்த சைலஜா பெற்றோருக்கு இதில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் சைலஜா - தனசேகர் ஆகிய இருவரும் தங்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டால் குடும்ப கவுரவத்துக்கு இழுக்காக அமைந்து விடும் என்று பாபு கருதியுள்ளார்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அழைப்பு ஒன்று வந்த நிலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாப்பாட்டை அப்படியே வைத்து விட்டு , அவசர அவசரமாக வெளியே சென்ற தனசேகர் இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை, நண்பர்கள் வீட்டுக்கு சென்று இருக்கலாம் என மறு நாள் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் காத்திருந்தும், தனசேகர் வீடுதிரும்பவே இல்லை.

இதனால் திங்கட்கிழமை காலை பலமனேர் காவல் நிலையத்தில் தனசேகர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து தனசேகர் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தனசேகர் போனிற்கு கடைசியாக யார் யாரிடம் பேசினார் என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது சைலஜாவின் தந்தை பாபு தனசேகரை சனிக்கிழமை இரவு செல்போன் மூலம் பேசி வீட்டில் இருந்து வரவழைத்தது தெரியவந்தது. பாபுவை பிடித்து விசாரித்த போது குடும்ப கவுரவத்தை காப்பாற்ற கொடூர கொலைகாரணான பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.

கடந்த சனிக்கிழமை இரவு தனசேகருக்கு போன் செய்த சைலஜாவின் தந்தை பாபு, மகளின் காதல் குறித்து உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறி தனது விவசாய நிலத்திற்கு வரும்படி அழைத்துள்ளார். இதையடுத்து சாப்பாட்டை வைத்து விட்டு தனது காதலியின் தந்தை பாபு சொன்ன இடத்திற்கு தனசேகர், அவசரமாக புறப்பட்டு சென்றுள்ளார்.

அங்குவைத்து தனது மகளை மறந்துவிடும்படி தனசேகரிடம் அழுது கண்ணீர் வடித்து கெஞ்சுவது போல நடித்த பாபு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காதலன் தனசேகரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் கொலை குறித்து எந்த ஒரு தயம் கிடைத்துவ் இடக்கூடாது என்பதற்காக தனசேகரின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி தனிதனியாக குழிதோண்டி அவரது விவசாய நிலத்திலேயே பாபு, புதைத்து வைத்திருந்ததையும் காவல்துறையினர் கண்டு பிடித்தனர்.

மகளை காதலித்ததற்காக , இளைஞரை தோட்டத்தில் கொலை செய்து புதைத்த கொடூர கொலையாளி பாபு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனசேகரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தனசேகரின் உறவினர்களை சமாதானப்படுத்தி உரிய தண்டனை பெற்று தரப்படும் என உறுதி அளித்த போலீசார் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

அதே நேரத்தில் கண்ணுக்கு தெரியாத குடும்ப கவுரவத்தை காப்பதற்காக ஊரரிந்த கொலைகாரனாகி கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் இந்த அகமேறிய தந்தை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments