மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை.. போலீசில் சிக்கினால் கிடைக்கும் பூஜை..!

0 6050
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சட்டவிரோதமாக ஆற்றுமணலை ஏற்றி சென்ற டிராக்டரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரத்தி பிடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஆற்றுப்படுகையில் மணல் அள்ளிக் கொண்டு, தப்ப முயன்ற டிராக்டரை போலீஸ் டி.எஸ்.பி விரட்டிப்பிடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதிகளில் ஆற்றில் டிராக்டர்கள் மூலம் மணல் திருடப்படுவதாக கமுதி டி.எஸ்.பி. பிரசன்னாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவிலாங்குளம் அருகே காணிக்கூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட டி.எஸ்.பி.யைக் கண்டதும், ஒரு ட்ராக்டர் மணலுடன் தப்பிச் சென்றது.

இதையடுத்து டிராக்டரை பிரசன்னா விரட்டிச் சென்றார். அப்போது வறண்டு கிடந்த வயல்காட்டிற்குள் டிராக்டரை இறக்கி தப்பிசெல்ல முயன்ற மணல் திருடர், டிராக்டரில் இருந்த ஆற்று மணலை வயலில் கொட்டிவிட்டு டிராக்டருடன் தப்பிக்க முயன்றார்.

இதையடுத்து டி.எஸ்.பி வாகன ஓட்டுனர் இறங்கிச்சென்று அந்த டிராக்டர் ஓட்டுனரை மடக்கிப்பிடித்து அழைத்து வந்தார்.

டி.எஸ்.பி நடத்திய விசாரணையில் தனக்கு மணல் அள்ளிச்செல்வது மட்டும் தான் தெரியும் என்றும் எங்கு அதனை கொட்ட வேண்டும் என்பது எல்லாம் உரிமையாளருக்குத்தான் தெரியும் எனக்கூறி டிராக்டர் ஓட்டுனர் சமாளித்தார்.

அந்த ஓட்டுனர் கொடுத்த தகவலின் பேரில் முனீஸ்வரன் என்ற டிரைவரை ஆற்று மணலுடன் கையும் களவுமாக பிடித்து கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கோவிலாங்குளம் போலீசார் முனீஸ்வரன் என்பவரை கைது செய்து ட்ராக்டரை பறிமுதல் செய்தனர்.

இனி காலை 11 மணிக்கு மேல மண் அள்ளுங்க என்று ஒரு பேச்சுக்கு சொன்னத நம்பி ஊரடங்கு நேரத்தில் ஆற்றுக்குள் டிராக்டருடன் இறங்கி மணல் அள்ளியதால் டிராக்டரை பறிகொடுத்ததுடன், கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments