ஆக்சிஜன் கருவியுடன் வேலைக்கு வந்த வங்கி மேலாளர்.. என்ன காரணாம்..?

0 2623
ஜார்கண்ட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் ஆக்சிஜனுடன்,பணிக்கு வந்தது குறித்து வங்கி தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் ஆக்சிஜனுடன்,பணிக்கு வந்தது குறித்து வங்கி தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

போகாரோவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரியும் அரவிந்த் குமார்,கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

ஆனால் நுரையீரல் தொற்று காரணமாக ஆக்சிஜன் உதவியுடனே சுவாசித்துவந்தார். மேலதிகாரிகள் பணிக்கு வருமாறு அழுத்தம் கொடுத்ததால் ஆக்சிஜனுடனே வங்கிக்கு வந்ததாக அரவிந்த்குமார் விளக்கமளித்தார்.

இந்நிலையில் வங்கியையும், வங்கி அதிகாரிகளையும் களங்கப்படுவதற்காக அரவிந்த்குமார் நாடகமாடியதாகவும், துறை ரீதியான விசாரணை நிலுவையில் இருப்பதால், அவரது ராஜினாமாவும் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கமளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments