"உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" துறை - பயனாளிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடல்

0 2086
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையின் கீழ் பயன்பெற்றவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையின் கீழ் பயன்பெற்றவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வுகாணும் பொருட்டு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறை உருவாக்கப்பட்டது.

இதுவரை பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்டம் மற்றும் வகை வாரியாக பிரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தீர்வு காணப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை சென்னை தமிழ்நாடு மின் ஆளுமை ஆணையர் அலுவலகத்தில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர், துறை ரீதியாக பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை, இதன் மீது எடுக்கப்பட்ட, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், இத்துறையின் கீழ் பயனடைந்த பயனாளிகளுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments