தடுப்பூசி போடப்படும் வேகம் இப்படியே தொடர்ந்தால் 3 மற்றும் 4வது அலையை இந்தியா எதிர்கொள்ளும்... ராகுல் காந்தி எச்சரிக்கை

0 1620
இந்தியாவில் தடுப்பூசி போடப்படுவது தற்போதைய வேகத்தில் தொடர்ந்தால், கொரோனாவின் 3 மற்றும் 4ஆவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு என்றும் ஆனால் இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்கு சரியாக வியூகம் வகுக்கப்படவில்லை என்றும் கூறினார். ((இந்திய மக்கள் தொகையில் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி போடுவதில் சரியான திட்டமிடல் இல்லாமல் போனால், கொரோனாவின் பல அலைகளை நாடு சந்திக்க வேண்டியிருக்கும் என குறிப்பிட்டார். )) நாட்டை வழிநடத்துவதற்கும், தனது தலைமை பண்பை வெளிக்காட்டவும் மோடிக்கு இதுவே சரியான நேரம் என்றும் எனவே, தற்போதைய சூழலில் அரசு நிர்வாகம், விரைவாகவும், திறன்மிக்க வகையிலும் செயல்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்தியாவில் தடுப்பூசி போடப்படுவது தற்போதைய வேகத்தில் தொடர்ந்தால், கொரோனாவின் 3 மற்றும் 4ஆவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு என்றும் ஆனால் இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்கு சரியாக வியூகம் வகுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

நாட்டை வழிநடத்துவதற்கும், தனது தலைமை பண்பை வெளிக்காட்டவும் மோடிக்கு இதுவே சரியான நேரம் என்றும் எனவே, தற்போதைய சூழலில் அரசு நிர்வாகம், விரைவாகவும், திறன்மிக்க வகையிலும் செயல்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments