12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும்.. ஆன்லைனில் நடத்தப்படாது - அமைச்சர் அன்பில் மகேஷ்

0 3265
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அவர், பிளஸ் டு பொதுத்தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என்றார்.

கொரோனா பாதிப்பை கருத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆன்லைனில் நடத்தும் திட்டம் உள்ளதா என்றகேள்விக்கு பதிலளித்த அவர், அதற்கான வாய்ப்புகள் இல்லை என திட்டவட்டமாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments