கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் நிறுத்தப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரம்... விசாரணை தீவிரம்

0 1357
கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் முகக்கவசத்தை மருத்துவர் அகற்றியதால் கொரோனா நோயாளி உயிரிழந்ததாக கூறப்படும் புகார் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.

கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் முகக்கவசத்தை மருத்துவர் அகற்றியதால் கொரோனா நோயாளி உயிரிழந்ததாக கூறப்படும் புகார் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திட்டக்குடியைச் சேர்ந்த ராஜாவுக்கு பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் முகக்கவசத்தை அவர் உணவருந்தும்போது கழட்டி வைத்திருந்த நிலையில், வேறொரு நோயாளிக்கு பொருத்த மருத்துவர், செவிலியர் எடுத்துச் சென்றதால், தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக கூறி, அவரது மனைவி கதறி அழுத வீடியோ வெளியானது.

இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ பணிகள் இயக்குநருக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற மருத்துவ பணிகள் மற்றும் ஊரக நலத்துறை அதிகாரிகள், ராஜாவின் மனைவி, குடும்பத்தினர் மற்றும் கடலூர் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் விசாரணை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments