புதுச்சேரியில் வெண்ட்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கைகள் நிரம்பியதால், நோயாளிகள் தமிழகத்தை நோக்கிச் செல்வதாக தகவல்..!

0 1185
புதுச்சேரியில் வெண்ட்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கைகள் நிரம்பியதால், நோயாளிகள் தமிழகத்தை நோக்கிச் செல்வதாக தகவல்

புதுச்சேரியில் வெண்ட்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கைகள் நிரம்பியதால், நோயாளிகள் தமிழகத்தை நோக்கிச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று ஆயிரத்திக்கும் மேலாக பதிவாகி வருகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 129 வெண்டிலேட்டர் படுக்கைகளும் நிரம்பிவிட்டன.

இதனால் தீவிர சிகிச்சை பெறவேண்டிய நோயாளிகள் தமிழகம் நோக்கி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் மொத்தமுள்ள 1,675 ஆக்ஜிசன் படுகைகளில் 1,600 படுக்கைகள் நிரம்பி உள்ளதாகவும் அரசு மருத்துவமனைகளில் 20 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 5 படுக்கைகளும் மட்டுமே காலியாக உள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 200 ஆக்ஜிசன் படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் தயார்படுத்தப்பட்டு வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments