ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் :தமிழக அரசுக்கு இ.பி.எஸ் வேண்டுகோள்

0 1103

கிராமப்புறங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினசரி பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், கிராமங்களில் தொற்றுப்பரவலை தடுக்க, புதிதாக வருபவர்களுக்கு தொற்று பரிசோதனை கட்டாயம் என்ற நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments