கோவை மாவட்டத்திலுள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு..! செலவை திமுகவே ஏற்கும் என அமைச்சர்கள் அறிவிப்பு

0 1633
கோவை மாவட்டத்திலுள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு..! செலவை திமுகவே ஏற்கும் என அமைச்சர்கள் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 15 அம்மா உணவகங்களில் திமுக சார்பில் இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 12 அம்மா உணவகங்களும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய நகராட்சிகளில் மூன்று அம்மா உணவகங்களும் என 15 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு உணவகத்திலும் நாளொன்றுக்கு 500 பேர் முதல் 700 பேர் வரை என பத்தாயிரம் பேர் உணவு உட்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், 15 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் எனவும் அதற்கான செலவை திமுகவே ஏற்கும் எனவும் அமைச்சர்கள் அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments