பத்ம ஷேசாத்ரியை தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது மாணவிகள் பாலியல் புகார்

0 5905
பத்ம ஷேசாத்ரியை தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது மாணவிகள் பாலியல் புகார்

த்ம ஷேசாத்ரி பள்ளியை தொடர்ந்து, சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது.

அங்கு வணிகவியல் பிரிவில் பணிபுரிந்த ஆனந்த் என்பவன், மாணவிகளிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக, பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாணவிகளை பாலியல் உள் நோக்கத்துடன் தொடுவது, தகாத முறையில் நடந்து கொள்வது என ஆசிரியர் ஆனந்த் சில்மிஷத்தில் ஈடுபடடதாக கூறப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே புகாரளித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், பாலியல் புகார் குறித்து அங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம், உயர்கல்வித் துறை செயலர், பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த கடிதத்தை தொடர்ந்து, ஆசிரியர் ஆனந்த் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக பதிலளித்துள்ள பள்ளி நிர்வாகம், மாணவர்கள் அளித்த புகாரை விசாரிக்க குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments