கொரோனா பாதிப்பு குறைந்ததன் எதிரொலியாகப் பங்குச்சந்தையில் ஏற்றம்

0 1247

ந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியதை அடுத்து இன்று பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒருநாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 86 ஆயிரமாகக் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாகப் பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றம் கண்டுள்ளது.

பகல் ஒன்பதே முக்கால் மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை பங்கு விலைக் குறியீடு சென்செக்ஸ் 330 புள்ளிகள் உயர்ந்து 51 ஆயிரத்து 445 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 111 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 449 ஆக இருந்தது. உலோகத் தொழில் நிறுவனங்களின் பங்குவிலை 3 விழுக்காடு வரை உயர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments