ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கைது செய்யப்பட்ட நபர்; ஜாமீன் பெற்று தலைமறைவாக இருந்த நிலையில் மயிலாடுதுறையில் கைது

0 1960
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கைது செய்யப்பட்ட நபர்; ஜாமீன் பெற்று தலைமறைவாக இருந்த நிலையில் மயிலாடுதுறையில் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்த நபர், மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2018ஆம் ஆண்டு கோவையில் கைது செய்யப்பட்ட முகம்மது ஆசிக் என்ற அந்த நபர் ஜாமீனில் வெளிவந்து மயிலாடுதுறை அடுத்த நீடூரில் பதுங்கி இருந்துள்ளார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நேரில் ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments