கோழிகளுடன் மயிலா..? ஆச்சரியத்தில் கிராம மக்கள்..!

0 15860

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் கூலித் தொழிலாளி வீட்டில் கோழிகளுடன் சேர்ந்து மயில் வளர்ந்து வருவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

பசுவந்தனை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் காட்டுப் பகுதியில் கிடந்த மயில் முட்டையை தன் வீட்டு கோழி முட்டைகளுடன் பொறிய வைத்து வளர்த்து வருகிறார். வீட்டின் உறுப்பினர் போல் மாறிய மயில் தோகையை விரித்து நடனமாடியும், கோழிகளுடன் சேர்ந்து இரை தேடியும் வருகிறது.

பலமுறை மயிலை காட்டு பகுதியில் விட்டு வந்தாலும் மீண்டும் திரும்பி வந்து விடுவதாக அவர் தெரிவிக்கிறார். வீட்டில் கோழிகளுடன் வளரும் மயிலை அப்பகுதி மக்கள் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments