தடுப்பூசி கொள்முதல் டெண்டர்.. ஜூன் 6 அன்று இறுதியாகும்..!

0 1677

கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலுக்கான உலகளாவிய டெண்டர் ஜூன் 6 ஆம் நாளில் இறுதி செய்யப்படும் எனத் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 60 தன்னார்வலர்களைக் கொண்டு இருசக்கர வாகனங்கள் மூலம் உணவை எடுத்துச் சென்று 2480 வீடுகளுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோவையில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தத் தனி அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒரு நாளைக்கு 550 டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில், 650 டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதாகத் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments