கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகள் அடுத்த மாதம் 30ந்தேதி வரை தொடர வேண்டும் :மத்திய அரசு உத்தரவு

0 1871
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகள் அடுத்த மாதம் 30ந்தேதி வரை தொடர வேண்டும் :மத்திய அரசு உத்தரவு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஜூன் 30-ஆம் தேதி வரை தொடர வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நெறிமுறைகள் ஜூன் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் மாநிலங்கள் பொதுமுடக்கத் தளர்வுகளை அறிவிப்பது குறித்து உள்ளூர் சூழலுக்கு ஏற்ப உரிய நேரத்தில் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments