அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு..! பாதுகாப்பு ஆலோசகருடன் ஆப்கானிஸ்தான் பிரச்சனை குறித்து விவாதம்

0 1220
அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு..! பாதுகாப்பு ஆலோசகருடன் ஆப்கானிஸ்தான் பிரச்சனை குறித்து விவாதம்

த்திய அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டனில் அதிபர் ஜோ பைடனின் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனை நேரில் சந்தித்த ஜெய்சங்கர் அவருடன் விரிவாக பல்வேறு பிரச்சினைகளைக் குறித்து ஆலோசித்தார். ஆப்கானிஸ்தான் படைக்குறைப்பு, இந்தோ பசிபிக் வர்த்தகம், கொரோனா தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதம் நடைபெற்றது.

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து கோவிட் நோய்க்கு முடிவு கட்டும் என்று ஜேக் சல்லிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதியான கேத்தரின் தய் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments