அமெரிக்காவில் தடுப்பூசி போட்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு... ஒரு மில்லியன் டாலர்களை வென்ற 22 வயது பெண்..!

0 2864


அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்காக நடத்தப்பட்ட குலுக்கல் பரிசில் 22 வயது பெண்மனிக்கு ஒரு மில்லியன் டாலர்களை வென்றார்.

ஒஹியோ ((Ohio)) மாகாண அரசு மக்கள் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிப்பதற்காக வாரந்தோறும் குலுக்கல் பரிசை அறிவித்தது. 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலரும், 18 வயதுக்கு உட்பட்ட ஒருவருக்கு கல்லூரி கட்டணம் இலவசம் என்றும் அறிவித்தது.

முதல் வாரம் நடந்த குலுக்கலில் 22 வயது பெண் பட்டதாரி ஒரு மில்லியன் டாலர்களையும், 14 வயது சிறுவன் கல்லூரி ஸ்காலர்ஷிப்பையும் தட்டிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments