தூக்கம் கலைப்பாரா சேலம் மாவட்ட சுகாதார அலுவலர்..? கொரோனாவை கட்டுப்படுத்த வழி இருக்கு..!

0 5093
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன்வசதி கொண்ட 40 படுக்கைகள் காலியாக இருக்கும் நிலையில், பெரும்பாலான நோயாளிகளை மோகன் குமார மங்கலம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மட்டுமே அனுப்புவதால் கொரொனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி கிடைக்காத அவலம் நீடித்து வருகின்றது

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க  ஆக்சிஜன்வசதி கொண்ட 40 படுக்கைகள் காலியாக இருக்கும் நிலையில், பெரும்பாலான நோயாளிகளை மோகன் குமார மங்கலம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மட்டுமே அனுப்புவதால் கொரொனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி கிடைக்காத அவலம் நீடித்து வருகின்றது.

சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை வரை 59 ஆயிரத்து 699 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர் இவர்களில் 52 ஆயிரத்து 82 1 பேர் குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது 6 ஆயிரத்து 16 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 862 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளனர் .

சேலம் மாவட்ட அளவில் செவ்வாய்கிழமை 928 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை சற்று குறைந்து 841 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். சேலம் மாநகராட்சி பகுதியில் மட்டும் புதன்கிழமை 371 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் உள்ள 1100 படுக்கைகளும் நிரம்பி விட்டது. இந்த நிலையில் தொங்கும் பூங்கா கொரோனா சிகிச்சை மையம், ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர் அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகளை அறிந்து நோயாளிகளை நோயின் தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்தி அனுப்ப வேண்டும்.

ஆனால் இதனை செய்யத்தவறிய அனுப்ப தவறிய மாவட்ட சுகாதாரத்துறையின் பொறுப்பற்ற நடவடிக்கையால் நோய் பாதிக்குள்ளானோர் படுக்கை வசதி நிரம்பிய மோகன் குமார மங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வெளியே ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் காத்திருக்கும் அவலம் தொடர்கின்றது.

உதாரணத்திற்கு வியாழக்கிழமை நிலவரப்படி மேட்டூரில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளில் 10 படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 40 படுக்கைகள் காலியாக உள்ளது இதில் 38 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதி கொண்டவை.

மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரியின் அலட்சியத்தால் இங்கு வரும் நோயாளிகளில் எத்தனை பேருக்கு ஆக்சிஜன் தேவை உள்ளது ? சாதாரண தொற்றுக்குள்ளானவர்கள் யார் ? என்று வகைப்படுத்தபடாமல், நேரடியாக மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படுவதால், சிலர் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகின்றது.

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கூட 50 படுக்கைகளும் நிரம்பி உள்ள நிலையில் 40 படுக்கைகள் காலியாக உள்ள மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையை கண்காணித்து அங்கு காலியாக உள்ள படுக்கைகளுக்கு ஏற்ப நோயாளிகளை வைகைப்படுத்தி அனுப்பி வைக்க வேண்டிய மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதால் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இயலாத அவலம் தொடர்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

சுகாதாரத்துறை அமைச்சர், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்குள் நோயாளிகளை சந்தித்திக்க உறவினர்களின் வருகையை கட்டுப்படுத்த அறிவுறுத்தி இருக்கும் நிலையில் , கூட்டத்தை கட்டுப்படுத்த அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதொடு, நோயாளிகளை கவனித்துக் கொள்ள தேவையான அளவு செவிலியர்களை பணிக்கு நியமித்தால் நோய்பரவலை கட்டுப்படுத்தலாம்.

அதே போல கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், சேலத்தில் 300 படுக்கைகளை கொண்ட அன்னபூர்ணி மருத்துவமனை மற்றும் 560 படுக்கைகளை கொண்ட விநாயகா மிஷன் போன்ற இரு தனியார் மருத்துவமனைகளிலும் தலா 100 படுக்கைகளை மட்டுமே கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த இரு மருத்துவமனைகளும் அரசு உத்தரவுபடி 150 முதல் 280 படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கினால் கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது .

எனவே சேலம் இரும்பாலை கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் செயல்பாட்டிற்கு வரும் வரையிலாவது, இந்த இரு தனியார் மருத்துவமனைகளிடம் இருந்தும் அரசு உத்தரவுப்படி கொரோனா நோயாளிகளுக்காண 50 சதவீத படுக்கை படுக்கை வசதியை அதிகாரிகள் கேட்டு பெற வேண்டும்..!

அதே போல மாவட்டம் முழுவதும் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 600 படுக்கை வசதிகளையும் கொரோனா நோயாளிக்களுக்காக பயன்படுத்தினால் நிலைமை சீராக வாய்ப்பு உருவாகும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments