தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற இளைஞரின் சட்டை கிழிய போலீஸ் தாக்கியதாக புகார்

0 80174
திருவள்ளூர் அருகே உடல்நலம் சரியில்லாத தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற இளைஞரின் சட்டை கிழிய போலீசார் தாக்கியதாக கூறி போராட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் அருகே உடல்நலம் சரியில்லாத தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற இளைஞரின் சட்டை கிழிய போலீசார் தாக்கியதாக கூறி போராட்டம் நடைபெற்றது. 

திருவாலங்காட்டை சேர்ந்த சந்தோஷ், தனது தாய்க்கு உடல்நலம் சரியில்லாததால், அவரை மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.

தாயை மருத்துவமனையில் அமரவைத்துவிட்டு, உணவு வாங்க அருகிலுள்ள உணவகத்திற்கு சென்றுபோது, உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மறித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து சந்தோஷை காவல் உதவி ஆய்வாளர் தாக்கயிதாக கூறப்படுகிறது. 

இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் அவசர தேவைக்காக மருத்துவமனை சென்ற இளைஞரை தாக்கிய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி காவல்நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments