புதிய டிஜிட்டல் கொள்கைகளை நிறைவேற்ற கூகுள் உறுதி - சுந்தர் பிச்சை

0 1736
இந்தியா கொண்டுவந்துள்ள புதிய டிஜிட்டல் கொள்கைகளை நடைமுறைப்படுத்த கூகுள் உறுதி பூண்டுள்ளது என அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இந்தியா கொண்டுவந்துள்ள புதிய டிஜிட்டல் கொள்கைகளை நடைமுறைப்படுத்த கூகுள் உறுதி பூண்டுள்ளது என அதன் தலைமை செயல் அதிகாரி  சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகுள் எந்தெந்த நாடுகளில் செயல்படுகிறதோ, அந்த நாடுகளின் உள்ளூர் சட்டங்களை எப்போதும் மதித்தே வந்துள்ளது என ஆசிய-பசிபிக் நாடுகளின் செய்தியாளர்கள் பங்கேற்ற காணொலி கூட்டத்தில் சுந்தர் பிச்சை கூறினார்.

சுதந்திரமான, வெளிப்படையான இன்டர்நெட் என்பது அடிப்படை ஆதாரமாக இருக்க வேண்டும் எனவும், இந்தியாவில் அது போன்ற நீண்ட பாரம்பரியம் நிலவுவதாகவும் சுந்தர் பிச்சை பாராட்டு தெரிவித்தார்.

எனினும் இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கைகள் குறித்து இப்போது எதுவும் தெரிவிக்க இயலாது என்றும், அவை குறித்து கூகுளின் இந்திய பிரிவினர் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments