எடப்பாடி பழனிசாமி கூறியதுபோல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 4230
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியது போல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியது போல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் தினசரி 250 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே பயன்பாட்டிற்கு கிடைத்ததாகவும் ஆனால் தேவை 575 மெட்ரிக் டன்னாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

அந்த குறைவான அளவு ஆக்சிஜனை வைத்தே நோயாளிகள் பெரிய அளவில் பாதிக்கப்படாத வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகுந்த நடவடிக்கை எடுத்ததாக மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர் நடவடிக்கைகளால் தற்போது தமிழகத்தில் தினசரி பயன்பாட்டிற்கு 650 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை கிடைக்கச் செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments