தினசரி கொரோனா பாதிப்பில் சென்னையை பின்னுக்குத் தள்ளியது கோவை...

0 3455
கோவை மாவட்டத்தில் ஒரு நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாலாயிரத்தைத் தாண்டியுள்ளதால், அங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் 890ஆக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் ஒரு நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாலாயிரத்தைத் தாண்டியுள்ளதால், அங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் 890ஆக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 4 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது சென்னையிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இல்லாத வகையில் அதிகமாகும்.

மாநகராட்சியில் 602 இடங்களும், புறநகரில் 288 இடங்களும் என மொத்தம் 890 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. கொரோனாவால் மூச்சுத் திணறல் ஏற்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் வசதி படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன.

குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையை விடப் புதிதாக சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மூச்சுத் திணறலால் கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் புதிய நோயாளிகளுக்கு ஜீரோ டிலே வார்டில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் உதவியுடனும், ஆக்சிஜன் வசதியுள்ள பேருந்து மூலமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகள் சிலர் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் ஆம்புலன்சிலேயே சிகிச்சை பெற வேண்டிய நிலையும் உள்ளது.

இந்நிலையில் கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுள்ள 200 படுக்கைகளுடன் அமைத்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அங்குப் பெரும்பாலான படுக்கைகளுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒருசில படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்ய வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணிகள் நிறைவடைந்த பின் நோயாளிகள் அனுமதிக்கப் படுவார்கள் எனக் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை  மாநகராட்சி கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதாகவும், சில தொழில் நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்டதை விடக் கூடுதல் பணியாளர்கள் பணியில் ஈடுபடுவதால் தொற்று அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments