அரசின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்பதற்கான கெடு முடிந்தது.. டுவிட்டரின் முடிவு என்ன?

0 1710
அரசின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்க கூகுளும், ஃபேஸ்புக்கும் முன்வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், தனது நிலைப்பாடு என்ன என்பதை டுவிட்டர் இதுவரை தெளிவுபடுத்தாமல் இருக்கிறது.

அரசின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்க கூகுளும், ஃபேஸ்புக்கும் முன்வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், தனது நிலைப்பாடு என்ன என்பதை டுவிட்டர் இதுவரை தெளிவுபடுத்தாமல் இருக்கிறது.

அதே நேரம் இந்த புதிய விதிகளை ஏற்காமல் இருக்க இந்தியா பிசினஸ் கவுன்சில், அமெரிக்க-இந்திய ராஜதந்திர கூட்டறவு அமைப்பு உள்ளிட்டவற்றின் மூலம் டுவிட்டர் லாபி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய டிஜிட்டல் விதிகளை செயல்படுத்துவதற்கான  பொறுப்பான அதிகாரிகளை நியமித்துள்ளதாக டுவிட்டர் தவிர்த்த இதர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதே நேரம், பாலியல் ஆதிக்கம் நிறைந்த உள்ளடக்கங்களை நீக்குவது உள்ளிட்டவற்றில் அதிகாரிகளை எந்த அடிப்படையில் நியமிப்பது உள்ளிட்ட சந்தேகங்களையும் அவை எழுப்பி உள்ளன. புதிய டிஜிட்டல் கொள்கையை ஏற்பதற்கான கெடு ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments