ஆன்டிபாடி காக்டெயில் மருந்தை மனிதர்களிடம் சோதனை நடத்த அனுமதிக்குமாறு ஜைடஸ் கெடிலா நிறுவனம் கோரிக்கை

0 1198

மிதமான கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்காக உருவாக்கியுள்ள ஆன்டிபாடி காக்டெயில் மருந்தை, மனிதர்களிடம் சோதனை நடத்த அனுமதிக்குமாறு ஜைடஸ் கெடிலா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

ZRC-3308 என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து, விலங்குகளிடம் சோதிக்கப்பட்ட போது, நுரையீரல் பாதிப்பை குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து மனிதர்களுக்கும் பாதுகாப்பானது என்பதால் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின் அனுமதியை கெடிலா நிறுவனம் கோருகிறது.

இரண்டு ஆன்டிபாடீசுகளின் கலவையான இந்த மருந்து, வைரஸ் தொற்றை எதிர்க்க மனித உடல் உருவாக்கும் ஆன்டிபாடீஸ் போன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இதைப் போன்று அமெரிக்காவில் கிளாஸ்கோ, எலி லில்லி உள்ளிட்ட நிறுவனங்கள் உருவாக்கியுள்ள மருந்து காக்டெயிலுக்கு அந்த நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அவசரகால அனுமதிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments