செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 2500க்கு மேல் பதிவாகி வந்த நிலையில் 1302 ஆக குறைந்தது..!

0 2702
செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 2500க்கு மேல் பதிவாகி வந்த நிலையில் 1302 ஆக குறைந்தது..!

ரு மாதத்திற்கு பிறகு செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1500க்கு கீழ் குறைந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அதிக அளவு வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் எண்ணிக்கையில் இரண்டாவது மாவட்டமாக செங்கல்பட்டு இருந்து வந்தது.

தற்போது ஆறாவது இடத்திற்கு சென்றுள்ளது. நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக ஒரு மாதத்திற்கு பின்னர் பாதிப்பு 1500க்கு கீழ் குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 1302 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 2149 குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டம் முழுவதும் 15 ஆயிரத்து 776 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments