ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் ஆலோசனை..!

0 7791
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் ஆலோசனை..!

மிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் 31ந் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 24 முதல் ஒருவாரக் காலத்துக்குத் தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இருப்பினும் ஒருநாளின் கொரோனா பாதிப்பு 36ஆயிரம் என்பதிலிருந்து 33 ஆயிரம் என்னும் அளவுக்கே குறைந்துள்ளது. மே 31ஆம் நாள் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், வருவாய்த் துறைச் செயலாளர், டிஜிபி, சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஆகியோர் பங்கேற்றனர். தளர்வில்லா ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், ஏதேனும் தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்தக் கூட்டத்துக்குப் பின் மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ வல்லுநர் குழு, சட்டமன்ற உறுப்பினர் குழுவுடனும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது. அதன் பின்னர் ஓரிரு நாட்களில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments