பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு..! பல நகரங்களில் செஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை

0 2107
பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு..! பல நகரங்களில் செஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை

ரு நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விலை உயர்த்தப்பட்டதில், மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை நெருங்கி உள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகளும், டீசல் 30 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வை தொடர்ந்து சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 95 ரூபாய் 28 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 89 ரூபாய் 39 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

பெரிய நகரங்களில், அதிகபட்சமாக, பெட்ரோல், போபாலில் லிட்டருக்கு 101 ரூபாய் 77 காசுகளுக்கு விற்பனையாகிறது. இந்த மாதத்தில் 14 ஆவது முறையாக பெட்ரோல் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டு இதுவரை இல்லாத அளவுக்கு உச்சபட்ச விலையை தொட்டுள்ளன.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் பல நகரங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து செஞ்சுரி அடித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments