உத்தரப்பிரதேசத்தில் 20 பேருக்கு முதல் தடுப்பூசி கோவிஷீல்ட், 2வது தடுப்பூசி கோவாக்சின்..! சுகாதாரத்துறை ஊழியர்கள் அலட்சியத்தால் மக்களிடையே குழப்பம்

0 2476
உத்தரப்பிரதேசத்தில் 20 பேருக்கு முதல் தடுப்பூசி கோவிஷீல்ட், 2வது தடுப்பூசி கோவாக்சின்..! சுகாதாரத்துறை ஊழியர்கள் அலட்சியத்தால் மக்களிடையே குழப்பம்

த்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்தா நகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் 20 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியை மாற்றிப் போட்ட சுகாதாரத்துறையினரால் மக்களிடையே குழப்பம் காணப்பட்டது.

முதல் டோஸ் கோவிஷீல்ட் போடப்பட்ட நிலையில் இரண்டாவது டோசும் அதே மருந்தை செலுத்தும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட போது அங்கு இருபது பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி கோவாக்சின் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சுகாதாரத்துறையினரிடம் விளக்கம் கோரப்பட்டிருப்பதாக அம்மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி சந்தீப் சவுத்திரி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments