மது போதையில் சொகுசுக் காரை ஓட்டி வந்த தொழிலதிபர்: சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்

0 4377

சென்னையில் குடிபோதையில் சொகுசுக் காரை தாறுமாறாக ஓட்டிச் சென்ற தொழிலதிபரை சினிமா பாணியில் போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

கோட்டூர்புரம் சர்தார் படேல் சாலை புற்றுநோய் மருத்துவமனை அருகே மெர்சிடிஸ் பென்ஸ் வகைக் கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் காரை நிறுத்த முயற்சித்தபோது நிற்காமல், அருகிலிருந்த தடுப்புகளை இடித்துத் தள்ளிக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து சினிமா பாணியில் அந்தக் காரை விரட்டிச் சென்று மத்திய கைலாஷ் அருகே போலீசார் மடக்கிப் பிடித்தனர். காருக்குள் இருந்த நபர் அளவுக்கதிகமான குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரீஷ் ஜேத்வானி என்ற அந்த நபர் யூரோ ஸ்டார் என்ற நிறுவனத்தின் சேர்மன் என்பதும் தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments