தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்படுமா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

0 3954
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்படுமா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

மிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

திருவள்ளூர் மாவட்டம் நேமத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், தளர்வுகளற்ற முழு ஊரடங்கிற்கு பலனாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது என்றார்.

அடுத்த இரண்டு மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரிய வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறிய முதலமைச்சர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments