எடியூரப்பாவின் செயல்பாடுகள் மீது பாஜக எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி..! சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தல்

0 1445
எடியூரப்பாவின் செயல்பாடுகள் மீது பாஜக எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி..! சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தல்

ர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் சிலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

எடியூரப்பா மீது அதிருப்தி கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ்வர் மற்றும் எம்எல்ஏ அரவிந்த் பெல்லாடு ஆகியோர் டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளனர்.

அப்போது கொரோனா தொற்றை எடியூரப்பா அரசு சரிவர கையாளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். இரண்டாவதாக ஜிண்டால் நிறுவனத்திற்கு 3 ஆயிரத்து 677 ஏக்கர் அரசு நிலத்தை வழங்க முடிவு செய்தது, 3வதாக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நிர்வாகத்தில் தலையிடுவதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தை எடியூரப்பா கூட்ட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments