பொறியியல் பாடத்திட்டங்களை தமிழ் உள்பட 8 மொழிகளில் பயில அனுமதி..!

0 3073

டப்பாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ் உள்ளிட்ட எட்டு மொழிகளில் கற்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ், இந்தி, மராத்தி, வங்காளம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, ஆகிய மொழிகளில் பொறியியல் கல்லூரிகள் பாடத்திட்டங்களை வழங்கலாம். இதன் மூலம் ஆங்கில குறைபாடு உடைய கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்கள் தங்கள் பிராந்திய மொழியில் பொறியியல் படிப்பை படிக்க இயலும்.

பலர் அச்சம் காரணமாக பொறியியல் படிப்பை ஏற்க மறுக்கும் சூழலையும் இது மாற்றியமைக்கும். பாடத்திட்டங்களை 22 மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான புதிய மென்பொருள் ஒன்றையும் தொழில் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments