கொரோனாவில் இருந்து குணமடைந்தோருக்காக இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ்... 30 கி.மீ. வரை இலவசமாக பயணிக்கலாம்..!

0 1739

கொரோனாவிலிருந்து குணமடைந்த நோயாளிகள் தங்கள் வீட்டிற்கு செல்ல 24 மணி நேரம் இயங்க கூடிய இலவச  ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் வட்டார போக்குவரத்து  சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

வட்டார போக்குவரத்து சார்பில் லீகல் ரைட்ஸ் கவுன்சிலுடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையின் மூலமாக, தொற்று குணமடைந்தவர்கள் மட்டுமின்றி கர்ப்பிணிகள், முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சேவை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மருத்துவமனையிலிருந்து 30  கிலோ மீட்டர் வரை இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் எனவும் இந்த சேவையை 1074 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர்களுக்கு முகக் கவசம், கிருமிநாசினி, கையுறை வழங்கப்படுவதுடன், ஓட்டுனர்- பயணிகள் இருக்கைக்கு இடையே பிளாஸ்டிக் முகப்பும் அமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments