வட மாநிலத்தவர்கள் வாக்களிப்பது குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு

0 4947

வட மாநிலத்தவர்கள் திமுகவுக்கு வாக்களிப்பதை விட, பாஜகவுக்கு தான் அதிகமாக வாக்குகளை செலுத்தி வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கூறியுள்ளார்.

சென்னை சூளையில் "மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை மெட்ரோ" என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட , இது நிகழ்ந்தது என்றார்.

இப்போதெல்லாம் எந்த வார்டில், எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகி உள்ளன ? என்பதை மின்னணி வாக்குப்பதிவ எந்திரங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும் என கூறிய அமைச்சர், தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக வட மாநிலத்தவர்களை திமுக புறக்கணிக்காது என்றார். சென்னை - துறைமுகம் தொகுதியில் வசிக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது நல்ல நிலைமையில் இருப்பதற்கு காரணம் திராவிட கட்சிகள் தான் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments