தமிழகத்தில் 5 - வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது : தொற்றில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

0 12034

மிழகத்தில் 5 - வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அதே நேரம் பெருந்தொற்றில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 717 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 33ஆயிரத்து 764 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 475 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

கோவையில் 4 ஆயிரத்து 268 பேருக்கும், சென்னையில் 3 ஆயிரத்து 561 பேருக்கும், திருப்பூரில் ஆயிரத்து 880 பேருக்கும், திருச்சியில் ஆயிரத்து 755 பேருக்கும், ஈரோட்டில் ஆயிரத்து 642 பேருக்கும், மதுரையில் ஆயிரத்து 538 பேருக்கும், திருவள்ளூரில் ஆயிரத்து 181பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 3 லட்சத்து 10ஆயிரத்து 224 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments