புதுச்சேரியில் மேலும் ஒரு சுயேட்சை MLA பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளதால் சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏக்களின் பலம் 12 ஆக உயர்வு..!

0 2981
புதுச்சேரியில் மேலும் ஒரு சுயேட்சை MLA பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளதால் சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏக்களின் பலம் 12 ஆக உயர்வு..!

புதுச்சேரியில் மேலும் ஒரு சுயேட்சை MLA பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளதால், சட்ட சபையில் அக்கட்சியின் பலம் 12 ஆக உயர்ந்துள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் பாஜக 6 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில் அக்கட்சியின் சார்பில் 3 நியமன MLA - க்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஏற்கனவே இரு சுயேட்சை MLA -க்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், திருப்புவனை சுயேட்சை MLA அங்காளன், பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளார். இதனால், புதுச்சேரி சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 12 ஆக உயர்ந்து உள்ளது.

இதற்கிடையே, புதுச்சேரி அமைச்சரவையில் அங்கம் வகிப்பது - எந்தெந்த இலாகாக்களை பெறுவது? என்பது உள்ளிட்ட பல்வேறுஅம்சங்கள் தொடர்பாக பாஜக MLA - க்கள் கூடி, ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments